பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
மலையாள திரையுலக நடிகர் சங்கம் 'அம்மா' என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. கடந்த வருடம் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி அதன் காரணமாக நடிகர் சங்கத்தைச் சேர்ந்த பலர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகினர். அதற்கு தார்மீக பொறுப்பேற்ற சங்க தலைவரான மோகன்லால், நிர்வாகிகள் பலரோடு ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து தற்போது வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சங்கத்தின் தலைவர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனன் மற்றும் வில்லன் நடிகர் தேவன் என இருவர் போட்டியில் இருக்கின்றனர். இதில் மோகன்லால், மம்முட்டி ஆதரவு பெற்ற ஸ்வேதா மேனன் தலைவராக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் மற்ற பொறுப்புகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.. ஆச்சரியமாக இதில் இணை செயலாளர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நடிகை அன்சிபா ஹாசன். இவர் திரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் மூத்த மகளாக நடித்து புகழ்பெற்றவர். கடந்த பல வருட காலமாகவே நடிகர் சங்க செயல்பாடுகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார் அன்சிபா ஹாசன். அந்த வகையில் தேர்தல் நடப்பதற்கு முன்பே இவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மலையாள திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.