தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

தென்னிந்திய மொழிகளில் நல்ல கதையம்சம் கொண்ட செலெக்ட்டிவான படங்களில் மட்டுமே நடித்து வருபவர் நடிகை பார்வதி. சமீப வருடங்களாக பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்து நடித்து வருகிறார். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து தங்கலான் படத்தில் நடித்துள்ள பார்வதி அந்த படத்தின் ரிலீஸை ஆவலாக எதிர்பார்த்து வருகிறார். சினிமா தவிர அவருக்கு செல்லப் பிராணிகளை வளர்ப்பதும் மாடி தோட்டத்தை பராமரிப்பதும் ரொம்பவே பிடித்தமான விஷயங்கள்.
அந்தவகையில் தனது வீட்டு பால்கனியில் கிட்டத்தட்ட 36 வகையான செடிகளை வளர்த்து வரும் பார்வதி 36 தாவரங்களுக்கு நான் ஒரு தாய் என்று பெருமையாக கூறுகிறார். அது மட்டுமல்ல இவரது பால்கனியில் சிறிய வகை ரகத்தைச் சேர்ந்த மாமரம் ஒன்றையும் வளர்த்து வருவது அவரது வீட்டிற்கு புதிதாக வருபவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. கூடவே ஒரு எலுமிச்சை மரமும் வளர்த்து வருகிறார் பார்வதி.
“நான் பார்க்கும் வேலை ரொம்பவே கடினமானது என்பதால் வேலைமுடிந்து திரும்பும்போது வீடு தான் என் மனதிற்கு ரிலாக்ஸ் தருவதாக இருக்க வேண்டும். அப்படி தங்களது தனிமை உணர்வுக்கு மிகுந்த மதிப்பு கொடுப்பவர்கள் இதுபோன்று தோட்டம் வளர்ப்பது சிறப்பு. ஒருநாள் காலையில் இவற்றுக்கு மத்தியில் அமர்ந்து தேனீர் அருந்தும்போது இப்படிப்பட்ட ஒரு வீட்டிலா நாம் இருக்கிறோம் என்கிற ஆச்சரியம் நமக்கே ஏற்பட வேண்டும்” என மாடி தோட்டம் பற்றி ஒரு பாடமே எடுக்கிறார் பார்வதி.