
25 வருடங்களுக்கு பிறகு குஞ்சாக்கோ போபனை தேடிவந்த பைக்
அனியத்தி பிறா படத்தில் அவர் கல்லூரி சென்று வருவதற்காகவும் காதலிப்பதாகவும் பயன்படுத்திய ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் வாகனத்தை தேடிப்பிடித்து தற்போது தனக்கு சொந்தமாக்கி உள்ளார் குஞ்சாக்கோ போபன். அந்த படம் வெளியான பின்னர் அதுபோன்ற சிவப்பு நிற ஸ்ப்ளெண்டர் பைக்கில் சுற்றும் மோகம் கல்லூரி இளைஞர்களிடம் அதிகரித்தது..
ஆலப்புழாவில் உள்ள ஹோண்டா பைக் ஷோரூமில் வேலை பார்க்கும் போனி என்பவர்தான் அந்த ஸ்ப்ளெண்டர் பைக்கை இத்தனை நாட்களாக தன்னிடம் வைத்து பராமரித்து வந்தார். இந்த தகவலை கேள்விப்பட்டு தற்போது அந்த பைக்கை வாங்கி தனக்கு சொந்தமாக்கி உள்ள குஞ்சாக்கோ போபன் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!