அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

2008ம் ஆண்டு மும்பை தாக்குதல் பின்னணியில் உருவான வெப் சீரிஸ் ஸ்டேட் ஆப் ஸீஜ்: 26/11. ஜீ 5 தளத்தில் வெளியானது. தற்போது இரண்டாவது சீசன் ஸ்டேட் ஆப் ஸீஜ்: டெம்பிள் அட்டாக் என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி உள்ளது. இது குஜராத்தில் கோவிலில் பக்தர்களை பணயக் கைதிகளா சிறைபிடித்த தீவிரவாதிகளிடமிருந்து பக்தர்களை காப்பாற்றிய இந்திய ராணு வீரர்களின் கதை. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ஜீ5ல் நாளை (ஜூலை 9) வெளிவருகிறது.
இதில் அக்ஷய் கண்ணா ஹீரோவாக நடித்துள்ளார். என் எஸ் ஜி கமாண்டோவாக விவேக் தாஹியா தனது கதாபாத்திரத்தை தொடர்கிறார். மேலும் கவுதம் ரோட், சமீர் சோனி, பர்வீன் தபஸ், மஞ்சரி பட்னிஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். கென் கோஷ் இயக்கி உள்ளார். ஓய்வுபெற்ற கர்னல் சுந்தீப் சென் இதற்கு ஆலோசகராக பணியாற்றி உள்ளார். இவர் மும்பை தாக்குதலின் போது இரண்டாம் கட்ட என் எஸ் ஜி தலைவராக இருந்தவர்.
இதுகுறித்து இயக்குனர் கென் கோஷ் கூறியிருப்பதாவது: இது வெறும் படம் அல்ல. நம்மைக் காக்க என்றும் தங்கள் உயிர்களை பணயம் வைக்கும் இந்தியாவின் என் எஸ் ஜி கமாண்டோக்களுக்கு ஒரு அஞ்சலி. டெம்பிள் அட்டாக் திரைப்படத்தில் நமது நாயகர்களுக்கு உரிய, சரியான ஒரு அஞ்சலியைத் தர நாங்கள் முயற்சித்திருக்கிறோம் .என்றார்.