'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதா ப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு திரைக்கு வந்த படம் கல்கி 2898 ஏடி. இந்த படம் திரைக்கு வந்து தற்போது ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. அது குறித்த ஒரு போட்டோவை அப்படத்தை தயாரித்த வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதை மறுபதிவு செய்துள்ளார் நடிகர் அமிதாப்பச்சன். அதோடு ஒரு பதிவும் வெளியிட்டுள்ளார்.
அதில், இப்படி ஒரு சிறந்த படத்தில் பங்கெடுத்தது பெருமையாக உள்ளது. வைஜெயந்தி பிலிம்ஸின் பெரியோர்களின் ஆசிகள் மறக்க முடியாது. அவர்கள் மீண்டும் எப்போது அழைத்தாலும் இந்த பிராஜெக்ட்டில் நடிப்பதற்கு தான் தயாராக இருப்பதாக பதிவிட்டுள்ளார் அமிதாப்பச்சன்.
இப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் பிரபாஸ் கர்ணன் வேடத்திலும், அமிதாப்பச்சன் அஸ்வத்தாமன் வேடத்திலும் நடித்திருந்த நிலையில், அந்த கதாபாத்திரங்கள் குறித்து பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பப்பட்டது. ஆனால் அந்த கேள்விகளுக்கான விடை கல்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது.




