'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' | ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது | சினிமாவில் நடக்கும் அநியாயங்களை பேசியதால் வாய்ப்பில்லை, சமையல் செய்து பிழைக்கிறேன் : ஸ்ரீரெட்டி புலம்பல் | பிளாஷ்பேக் : 40 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரான கஸ்தூரி ராஜா | பிளாஷ்பேக் : தமிழில் டப் ஆன முதல் மலையாள படம் | எனது கேரக்டர் குறித்த பயம், பதற்றம் இருந்தது : ‛லவ் மேரேஜ்' சுஷ்மிதா பட் | கவுதமியிடம் அமலாக்கத்துறை 7 மணி நேரம் விசாரணை | அன்று ஹர்பஜன் சிங்... இன்று சுரேஷ் ரெய்னா : தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்புவாரா மட்டை வீரர்! |
பிரபல பாலிவுட் நடிகர் சத்ருக்கன் சின்ஹா. அவரது மகள் சோனாக்ஷி சின்ஹா. 2010ல் வெளிவந்த 'தபாங்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'லிங்கா' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
கடந்த சில வருடங்களாக அவருக்கான திரையுலக வாய்ப்புகள் குறைந்துவிட்டது. சமீபத்தில் வெளியான வெப் சீரிஸ் ஆன 'ஹீராமண்டி'யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இரண்டு ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
சோனாக்ஷி கடந்த சில வருடங்களாகவே ஜாகீர் இக்பால் என்பவரைக் காதலித்து வந்தார். இருவருக்கும் ஜுன் 23ம் தேதி மும்பையில் திருமணம் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இருவரது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டு வருகிறார்கள்
ஜாகீர் இக்பால் ஒரு நடிகர்தான். 2019ல் வெளிவந்த 'நோட்புக்' படத்தில் அறிமுகமானவர். சோனாக்ஷி, ஜாகீர் இருவரும் 'டபுள் எக்ஸ்எல்' படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்.