பந்தா இல்லாத நாகர்ஜூனா | விக்ரம் சுகுமாரனின் மறைவுக்கு அதிக வேலைப்பளு காரணமா? : நடிகை விஜி சந்திரசேகர் வேதனை | நூறு ஸ்ரேயா கோஷல்களை தூக்கி சாப்பிட்டு விடுவார் : பாடகி 'தீ' குறித்து சின்மயி புகழாரம் | பஹத் பாசில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில்லை: நடிகர் வெளியிட்ட ஆச்சரிய தகவல் | மீண்டும் தலைவராக விரும்பும் மோகன்லால்... : ஆனால் ஒரு நிபந்தனையுடன்? | ஐந்து வருடமாக ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன் : விஜய் பட நாயகி ஓபன் டாக் | தக்லைப் படத்தின் 'விண்வெளி நாயகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது! | நான் சந்தோஷத்தை வெளியில் தேடியது கிடையாது! - 'குபேரா' பட விழாவில் தனுஷ் பேச்சு | தோழிகள் படைசூழ தாய்லாந்து நாட்டிற்கு டூர் சென்ற கவுரி கிஷன்! | அந்தமான் செல்லும் சாய் தன்சிகா: ஏன் தெரியுமா? |
தமிழில் தனுஷ் ஜோடியாக 'அனேகன்' படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர். அதன் பிறகு பாலிவுட் படங்களில் நடித்தார். ஜாக்கி சானுடன் இணைந்து 'குங்பூ யோகா' என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்தார். கடைசியாக பிரபு தேவாவுடன் 'பஹீரா' படத்தில் நடித்தார். தற்போது அவர் 'பம்பாய் மேரிஜான்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
எக்செல் மீடியா மற்றும் எண்டர்டெயின்மென்ட் சார்பில் ரித்தேஷ் சித்வானி, காசிம் ஜக்மகியா மற்றும் பர்ஹான் அக்தர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஷுஜாத் சவுதாகர் இயக்கி உள்ளார். இந்த தொடரில், அமைரா தஸ்தூருடன் கே கே மேனன், அவினாஷ் திவாரி, கிருத்திகா கம்ரா, மற்றும் நிவேதிதா பட்டாச்சார்யா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
10 எபிசோட்கள் கொண்ட இந்த இந்தி ஒரிஜினல் தொடர் செப்டம்பர் 14 அன்று இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதிலும், ஆங்கிலம் மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளிலும், மற்றும் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன் போர்த்துகீசு, ஜப்பான், போலிஷ், லத்தீன் ஸ்பானிஷ், காஸ்டிலியன் ஸ்பானிஷ், அரபிக் மற்றும் துருக்கி போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
இந்த தொடர் 1960களில் மும்பை தாதாக்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு உருவாகி உள்ளது. வன்முறை காட்சிகளும் நிறைந்த கிரைம் திரில்லர் தொடராக இது உருவாகி உள்ளது. தாதாக்களை ஒழிக்க போராடும் ஒரு போலீஸ் அதிகாரியின் மகனே தாதாவாக உருவாவது போன்ற கதை அமைப்பை கொண்ட தொடர்.