'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் |
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரது ஒரே மகள் ஆராத்யா பச்சன். சில யு டியூப் சேனல்களை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். 11 வயதான மைனர் பெண்ணான தன் மீது சில யு டியூப் சேனல்கள் தன்னுடைய உடல்நலம் குறித்து ஆதாராமற்ற வதந்திகளை வெளியிடுவதாக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பிரபங்களை 'டிரோல்' என்ற பெயரில் கிண்டலடிப்பது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. அவர்களின் குழந்தைகளைப் பற்றிக் கூட இப்படி நாகரீகமற்ற முறையில் 'டிரோல்' செய்து வருகிறார்கள்.
ஆராத்யா வழக்கில் நீதிமன்றம் தரப் போகும் தீர்ப்பு நாகரீகமற்ற முறையில் பதிவிடும் சிலருக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவில் இருக்க வேண்டும் என்றுதான் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.