Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஜூனியர் என்டிஆரின் குழந்தைகளுக்கு ஆலியா பட் அனுப்பி வைத்த அன்பு பரிசு

26 மார், 2023 - 05:59 IST
எழுத்தின் அளவு:
Jr-NTR-thanks-Alia-Bhatt-for-personalised-gifts-for-his-sons,-wants-one-for-himself

பாலிவுட் நடிகையான ஆலியா பட் கடந்த வருடம் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் குறைந்த காட்சிகளே நடித்திருந்தாலும், ராம்சரணுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் கூட, ஜூனியர் என்டிஆருடன் தான் அவர் இணைந்து நடிக்கும் காட்சிகள் அதிகமாக இருந்தன. அந்த வகையில் படப்பிடிப்பின்போது ஜூனியர் என்டிஆருடன் நட்பாக பழகினார்.

இந்த நிலையில் தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது கிடைத்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக ஜூனியர் என்டிஆரின் குழந்தைகளான அபய் மற்றும் பார்கவா இருவருக்கும் தன்னுடைய சொந்த பிராண்ட் நிறுவனத்திலிருந்து அழகான ஆடைகளை பரிசாக அனுப்பி வைத்துள்ளார் ஆலியா பட்.
இந்த உடைகளை அணிந்து கொண்ட தன்னுடைய குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஜூனியர் என்டிஆர், ஆலியா பட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் தன் பெயரிலும் இதேபோன்று ஒரே பரிசு ஆலியா பட்டிடம் இருந்து எப்போது வரும் என எதிர்பார்ப்பதாகவும் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க நானும் ஒரு காரணம் ; அஜய் தேவ்கன்நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் ... 10 கோடிக்கு காரை வாங்கிய ஷாரூக்கான் 10 கோடிக்கு காரை வாங்கிய ஷாரூக்கான்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)