தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் | திடீரென கதை சர்ச்சையை கிளப்பிய கதாசிரியருக்கு நிவின்பாலி பட தயாரிப்பாளர் கண்டனம் | வேட்டைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மாவீரன் - ஞாயிறு திரைப்படங்கள் | பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் |
சமீபகாலமாக நடிகர் வடிவேலு புதிய படங்களில் நடிக்கவில்லை என்றபோதும் அவ்வப்போது படங்கள், வெப்சீரிஸ்களில் அவர் நடிப்பது போன்ற வதந்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக டிடெக்டிவ் நேசமணி என்ற படத்தில் வடிவேலு நடிக்க போவதாகவும், அந்த படத்தை சி.வி.குமார் தயாரிப்பதாகவும் சமூகவலைதளத்தில் வடிவேலு போஸ்டருடன் ஒரு செய்தி வைரலானது.
இதை தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது டுவிட்டரில் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛பொய் செய்தியாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாப்பா... ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா. என்று பதிவிட்டுள்ளார்.
ஆக, வடிவேலுவின் புதிய படம் குறித்த இந்த செய்தியும் வதந்தியாகி விட்டது.