விவேக் கதாநாயகனாக நடிக்க, டி.பி.கஜேந்திரன் இயக்கி வரும் படம், `மகனே என் மருமகனே.' இந்த படத்தில், இன்னொரு கதாநாயகனாக மிதுன் நடிக்கிறார். விவேக் ஜோடியாக யாமினி சர்மா நடிக்கிறார். மிதுன் ஜோடியாக தேன்மொழி என்ற புதுமுகம் அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் நாசர், லிவிங்ஸ்டன், தம்பி ராமையா, சரண்யா, மீனாள், பரவை முனியம்மா, ருக்ஷா ஆகியோரும் பங்குபெறுகிறார்கள். முக்கிய வேடத்தில், டைரக்டர் டி.பி.கஜேந்திரன் நடித்து இருக்கிறார்.
வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப்போகும் என்று சொல்லப்படுவதை உண்மையாக்குவது போல் படத்துக்கு படம் வித்தியாசமான நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் விவேக், இந்த படத்தில் சரண்யா - நாசர் தம்பதியின் மருமகனாக, மிதுனின் மைத்துனராக, `சேலஞ்ச் சிங்காரம்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க் வழங்க, முத்துலட்சுமி மூவீஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு தினா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு: ராஜராஜன்.