ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

மேடை நிகழ்ச்சிகளில், நாடகங்களில் காமெடியான இருந்து சின்னத்திரைக்கு வந்தவர் மதுரை முத்து. தற்போது சின்னத்திரையுலகில் காமெடியனாக வலம் வருகிறார். அசத்த போவது யாரு, காமெடி ஜங்ஷன், சண்டே கலாட்டா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதுதவிர மேடை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்களிலும் பேசி வருகிறார். நதிகள் நனைவதில்லை, மதுரை வீரன், கர்ஜனை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கலர்ஸ் தமிழ் சேனிலில் ஒளிபரப்பாகும் ஜில்லுன்னு ஒரு காதல் தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்த தொடரின் நாயகியாக தர்ஷினி கவுடா, கயல்விழி என்ற கேரக்டரில் நடிக்கிறார். கயல்விழியை குடும்பத்தார் கொடுமை செய்ய தொடங்கி இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வரும் தாய் மாமனாக எண்ட்ரி கொடுக்கிறார் மதுரை முத்து.
இந்த தொடரின் நாயகனாக சமீர் அகமது நடிக்கிறார். கடந்த ஜனவரி மாதம் ஒளிபரப்பான இந்த தொடரில் இதுவரை 125க்கும் மேற்பட்ட எபிசோட்கள் ஒளிபரப்பாகி உள்ளது. ரமேஷ் திலக்கின் கதையை சுரேஷ் சண்முகம் இயக்கி வருகிறார்.
மதுரை முத்து நடிக்கும் பகுதிகள் காமெடியாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு முன் இதே தொடரில் ராஜேஷ், ராகவி, சிங்கமுத்து, சஞ்சனா சிங், அபிராமி வெங்கடாசலம், சோனா ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.




