இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சின்னத்திரை சீரியல்களில் அண்ணி கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் ரேகா கிருஷ்ணப்பா. தெய்வமகள்' சீரியலில் அண்ணி காயத்ரியாக நடித்து புகழ்பெற்றார். சின்னத்திரை வட்டாரத்தில் இவரை அண்ணியார் ரேகா என்றே அழைப்பார்கள்.
கடந்த சில வருடங்களாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தவர் தற்போது சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறார். தற்போது தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் நடித்து வருகிறார். இதனை தென்றல், தெய்வமகள், நாயகி தொடர்களை இயக்கிய குமரன் இயக்குகிறார். ரேகா தவிர, தென்றல் புகழ் தீபக் மற்றும் நாயகி புகழ் நக்ஷத்ரா நாகேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த தொடர் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டிருக்கும் ரேகா. "அதே குழுவினர் விரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறோம்" என்று எழுதியுள்ளார்.