ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சி 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், கிரிஷ், சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஸ்பெஷல் ரவுண்டுடன் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில், கடந்த வாரம் டெடிகேஷன் ரவுண்டு நடைபெற்றது. போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்காக ஒரு பாடலை தேர்வு செய்து பாடினார்கள்.
இந்நிலையில்,போட்டியாளர் ஸ்வேதா தனது அப்பாவிற்காக டெடிகேட் செய்து 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற பாடலை பாடினார். அப்போது அவர் தனது தந்தைக்காக எழுதியிருந்த கடிதத்தை மேடையில் படித்தார். அந்த கடிதத்தில் 'எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். ஆனால், உங்களுக்கு என்னை பிடிக்குமா? பிடிக்காதா? என்று தெரியவில்லை. எனக்கு உங்களிடமிருந்து முத்தமும் அரவணைப்பும் வேண்டும்' என்று எழுதியிருந்தார்.
இதைபார்த்து உணர்ச்சிவசப்பட்ட ஸ்வேதாவின் தந்தை தன் மகள் தன் பாசத்திற்காக இவ்வளவு ஏங்கி தவிக்கிறாளா? என்று வருத்தப்பட்டு உடனடியாக மேடையிலேயே ஸ்வேதாவின் காலிலேயே விழுந்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பார்ப்பவர்கள் அனைவரையும் கண்கலங்க செய்தது. அதேசமயம் ஸ்வேதாவின் நீண்ட நாள் ஆசையான தந்தையின் முத்தமும் அவருக்கு கிடைத்துவிட்டது.