ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்தார் ரச்சிதா மஹாலெட்சுமி. அதன்பின் அவர் கமிட்டான சீரியல்கள் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே தடைப்பட்டு நின்றுவிட, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின் ரச்சிதா சினிமாவில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அதுகுறித்தும் எந்தவொரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், ரச்சிதா தனது இன்ஸ்டாகிராமில் போலீஸ் உடையணிந்து கெத்தாக போஸ் கொடுத்து 'விரைவில்' என வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் சினிமாவில் நடிக்கிறாரா? சீரியலில் நடிக்கிறாரா? என்பது இதுவரை தெரியவில்லை. இருப்பினும் ரச்சிதாவின் கம்பேக் அப்டேட் அவரது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.