மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் கிழக்கு வாசல் தொடர் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகர், ரேஷ்மா முரளிதரன், அருண்ராஜன், அஸ்வினி, ஆனந்த் பாபு, ரேஷ்மா முரளிதரன், வெங்கட் ரங்கநாதன், தினேஷ், ரோஜா ஸ்ரீ என சின்னத்திரையின் பிரபல நடிகர்கள் பலரும் இந்த தொடரில் சங்கமித்துள்ளனர். அதிக எதிர்பார்ப்பிற்கிடையே உருவாகி வரும் இந்த தொடரில் ராதிகாவும், வேணு அர்விந்தும் மீண்டும் ஜோடியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் விரைவில் அவர்களும் ஷூட்டிங்கில் இணைவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கிழக்கு வாசல் தொடரின் முதல் நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இண்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒட்டு மொத்த பிரபலங்களையும் செல்திரையில் பார்த்து குஷியான ரசிகர்கள் விரைவில் சீரியலை டிவி திரையில் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.