உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் காட்டு ராணியாக நடித்த பாலிவுட் நடிகை | 'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி | பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் | புதிய சாதனை படைக்கத் தவறிய பிரபாஸின் 'ரிபெல் சாப்' பாடல் |

விஜய் டிவியின் ஹிட் தொடரான பாக்கியலெட்சுமி சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வந்தார் சதீஷ். சதீஷின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து பலரும் அவரது ரசிகர்களாக மாறிவிட்டனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளை கடந்துவிட்ட பாக்கியலெட்சுமி தொடர் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
நடிகர் ரஞ்சித்தும் பழனிச்சாமி என்கிற கேரக்டரில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்துள்ளார். கோபி, ராதிகாவுடன் செட்டிலாகிவிட்ட நிலையில், பாக்கியலெட்சுமிக்கு ஜோடியாக பழனிச்சாமியாக ரஞ்சித் வந்துள்ளாரா? அப்படியெனில் இனி சீரியலில் சதீஷின் கதி என்ன? என்று ரசிகர்களிடம் கேள்விகள் எழுந்தது.
இந்நிலையில், அண்மையில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள சதீஷ், 'ஹீரோ ரஞ்சித் சார் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். புது ஹீரோ ரஞ்சித்துக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும். இனி கோபியின் கேரக்டர் மிகவும் குறைவாகவே இருக்கும். மூன்று வருடம் ஆகிவிட்டது. 800 எபிசோடுகள் வந்துவிட்டது. இனி நான் கொஞ்சம் ஓய்வெடுக்க போகிறேன்' என்று அதில் கூறியுள்ளார்.
கோபியின் கேரக்டர் பாக்கியலெட்சுமி தொடரின் வெற்றிக்கு பல வகையிலும் பாசிட்டாவாக இருந்தது. தற்போது கோபி கேரக்டர் குறைக்கப்படும் என்ற தகவல் ரசிகர்களை சோர்வடைய செய்துள்ளது.