2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
விஜய் டிவியின் 'பாக்கியலெட்சுமி' மற்றும் 'செல்லம்மா' ஆகிய தொடர்களில் நடித்து வந்த திவ்யா கணேஷ், திடீரென செல்லம்மா தொடரிலிருந்து விலகினார். இதனையடுத்து திவ்யா கணேஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக தான் சீரியலை விட்டு விலகினார் என்று சிலரும், அந்த தொடரின் நாயகன் அர்னவ் தான் காரணம் என்று சிலரும், டிஆர்பி குறைந்ததால்தான் விலகிவிட்டார் என்றும் பலவாறாக கருத்துகள் எழுந்தன.
இந்நிலையில், சீரியலை விட்டு விலகியதற்கானக் காரணத்தை திவ்யா கணேஷ் அண்மையில் சோஷியல் மீடியா லைவ்வில் வந்த போது ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். அதில், 'செல்லம்மா தொடரில் என்னை தொந்தரவு செய்து கொண்டே இருந்தனர். வேலை பார்க்கும் இடத்தில் நிம்மதி இல்லை என்றால் வேலையை விட்டுவிடுவோம் அல்லவா? அதனால் தான் விலகிவிட்டேன். அதே சமயம் பாக்கியலெட்சுமி தொடரில் தொடர்ந்து ஜெனியாக நடிப்பேன். அந்த சீரியலிலிருந்து விலகும் பேச்சுக்கே இடம் இல்லை' என்று கூறியுள்ளார். எனினும், செல்லம்மா தொடரில் தன்னை தொந்தரவு செய்தது யார்? என்ன செய்தார்கள் என்பது குறித்து திவ்யா எதையும் வெளிப்படையாக கூறவில்லை.