அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
ஆபூர்வராகம், கேளடி கண்மணி, சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட பல ஹிட் தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஏகவள்ளி. இவர், பிரபல சின்னத்திரை நடிகையான யமுனா சின்னத்துரையின் சகோதரி ஆவார். ஏகவள்ளி தன்னுடன் நடித்த பெரோஸ்கான் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து போட்டோஷூட்டிங் நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர். சில தினங்களுக்கு முன் ஏகவள்ளியும் திடீரென தலையில் துப்பட்டாவுடனும் நெற்றியில் பொட்டு இல்லாமலும் இஸ்லாமிய பெண்ணாகவே மாறியிருந்தார்.
பெரோஸ்கானை திருமணம் செய்ய தான் ஏகவள்ளி மதம் மாறிவிட்டார் என அப்போதே கிசுகிசுக்கள் சோஷியல் மீடியாவில் வலம் வந்தன. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணம் எப்போது, எங்கே, எப்படி நடந்தது என்பது குறித்த செய்திகள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், ஜீ தமிழ் நடிகரான அம்ருத் கலாம் பெரோஸ்கான், ஏகவள்ளியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டு 'ஸ்வீட்டான சிம்பிளான திருமணம்' என்று வாழ்த்துகள் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சின்னத்திரை நடிகை நக்ஷத்திராவும் கமெண்டில் வாழ்த்து கூறியுள்ளார். ஆனால், மற்ற பிரபலங்களோ அல்லது யமுனா சின்னத்துரையின் பதிவிலோ ஏகவள்ளியின் திருமணம் குறித்து எந்தவொரு பதிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏகவள்ளி வீட்டாருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லாததே இவர்களது திருமணம் சிம்பிளாக நடைபெற்றதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.