'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி வெல்லும் திறமை. நடுவர்களாக நடிகை நிக்கி கல்ராணி, பிரபல நடிகரும் தற்காப்பு கலை நிபுணருமான ஹுசைனி மற்றும் பிரபல நடன இயக்குனரான ஸ்ரீதர் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதன் இறுதிச்சுற்றில் துரோணா அகாடமி வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றது. அந்த அணிக்கு இரண்டரை லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. ஜே.சி.டி அணிக்கு இரண்டாவதாக இடம் கிடைத்தது. அதற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. யோவா யோகா அகாடமி 3வது இடம் பிடித்தது அதற்கு 75 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
இதுகுறித்து நிக்கி கல்ராணி கூறியதாவது : நாட்டின் மூலை முடுக்கிலிருந்தும் திறமைசாலிகள் பங்கேற்றிருக்கும் இதுபோன்ற அற்புதமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன். துரோணா அகாடமி வெற்றி பட்டத்தை வென்றதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களின் திறமைக்கு அங்கீகாரமாக இந்த வெற்றி கிடைத்தது, இருப்பினும் இங்குள்ள ஒவ்வொரு திறமையும் தனித்துவமானது என்று நான் உணர்கிறேன். மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் ஏற்கனவே தங்கள் சொந்த துறையில் வெற்றி பெற்றவர்கள். கலர்ஸ் தமிழ் சேனலானது, வெல்லும் திறமை மூலம் திறமையான வல்லுனர்களின் தகுதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.