இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் | லூசிபர் 2ம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் : நடிகை நைலா உஷா பெருமிதம் | மே மாத ரிலீஸுக்கு தயாராகும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' | அதை மஞ்சுவாரியரிடமே போய் கேளுங்கள் ; நடிகை பார்வதி காட்டம் |
பிரபல பெண் கானா பாடகரான இசைவாணி சின்னத்திரையின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார். பிபிசி சாதனை பெண்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும், அவரை பற்றிய தனிப்பட்ட விவகாரங்கள் எதுவும் முதலில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தான் இசைவாணியை பலரும் அறிவர். இசைவாணிக்கு முதலில் திருமணம் ஆகியிருந்த நிலையில், அவர் தனது கணவரை சில மாதங்களுக்கு முன் விவகாரத்து செய்திருந்தார். இசைவாணி தனது விவகாரத்து குறித்து பிக்பாஸில் பாவ்னி ரெட்டியிடம் பகிர்ந்திருந்தார். ஆனால், அவர்கள் பிரிந்ததற்கான காரணம் ரசிகர்கள் பலருக்கும் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், இசைவாணி அளித்துள்ள பேட்டியில் தனது விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், 'கானா பாடல் பாட என் வீட்டில் எனக்கு இருந்த ஆதரவு என் கணவர் வீட்டில் எனக்கு கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் என் கணவரை விவாகரத்து செய்தேன்' என்று கூறியுள்ளார்.