ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஜோடி' நிகழ்ச்சியில் சுனிதாவுடன் சேர்ந்து கும்மாங்குத்து நடனம் போட்டவர் ப்ரியா மஞ்சுநாதன். 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் நுழைந்த இவர் பிறகு விஜய் டிவியில் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று நிறைய திட்டுகளையும் நடுவர்களிடம் வாங்கியிருந்தார். அப்போதெல்லாம் இப்போது உள்ள குக் வித் கோமாளில் நிகழ்ச்சி போல் ஜாலியாக இருக்காது. நடுவர்களாக இருக்கும் செஃப் தாமுவும், வெங்கடேஷ் பட்டும் செம ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார்கள். ப்ரியா மஞ்சுநாதன் நடித்த ஒரே சீரியல் சரவணன் மீனாட்சி மட்டும் தான். ஏனெனில் தனக்கு நடிப்பு வராது என்பதால் ரிஸ்க் எடுக்கவில்லை.
திருமணம் செய்து கொண்ட ப்ரியா, திடீரென தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு குட் பை சொல்லிவிட்டு குடும்பத்தை கவனிக்க சென்றுவிட்டார். தற்போது இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மீடியாவை விட்டு விலகியிருந்தாலும், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ப்ரியாவை பலரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகவே மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரிடம் தொலைக்காட்சியில் மீண்டும் வருவீர்களா என்று கேட்டதற்கு, 'அதற்கான எந்த அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை குக் வித் கோமாளியில் வாய்ப்பு கிடைத்தால் கம்பேக் கொடுப்பேன்' என கூறியுள்ளார்.