'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக 'சமையல் மந்திரம்' போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் திவ்யா. தற்போது சீரியல்களிலும், படங்களிலும் காமெடி ரோல்களில் நடித்து வருகிறார். திவ்யா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வேலைக்காரன் தொடரிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். முன்னதாக இந்த தொடர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் ஒளிபரப்பான வேலன் - வள்ளி திருமண எபிசோடுக்கு பிறகு டிஆர்பியில் டாப்பில் வந்துவிட்டது.
இந்நிலையில், நடிகை திவ்யாவிற்கு வாட்டர் ஹீட்டரில் ஷாக் அடிப்பது போல் நகைச்சுவை காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அதற்காக திவ்யா போடும் மேக்கப் மற்றும் அந்த சீனின் மேக்கிங் வீடியோவை திவ்யா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த காமெடி வீடியோ பலராலும் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. மேலும், அதில் திவ்யாவின் ஆக்டிங்கை பாராட்டி பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.