ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி | முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் |
பிரபல பட்டிமன்ற பேச்சாளரான பாரதி பாஸ்கரின் உடல்நலம் நன்றாக தேறி வருகிறது. இந்நிலையில் அவர் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் நட்சத்திர பேச்சாளரான பாரதி பாஸ்கர் அன்மையில் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பாரதி பாஸ்கர், 'மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக 22 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியுள்ளேன். உடல்நலம் நன்றாக தேறி வருகிறது. எல்லா மதங்களையும் கடந்து எல்லோரும் எனக்காக பிரார்த்தனை செய்திருக்கிறீர்கள். நீங்கள் அனுப்பிய கோவில் பிரசாதங்கள் மலை போல் குவிந்துள்ளது. உங்களுக்காக நான் எதுவுமே செய்ததில்லை. ஆனால் நான் உங்களுடன் தமிழில் பேசியிருக்கிறேன். தமிழ் உங்களையும் என்னையும் இணைத்துள்ளது. இரண்டாவது முறை கிடைத்த இந்த வாழ்க்கை இன்னும் அழகாக மாறியிருக்கிறது. முழுமையாக உடல்நலம் தேறி விரைவிலேயே மேடைக்கு வருவேன் என நம்புகிறேன். இது என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. சிறு வார்த்தையில் நன்றி என இதை சொல்லிவிட முடியாது. மீண்டும் சந்திப்போம்' என உருக்கமாக பேசியுள்ளார்.
பாரதி பாஸ்கரின் உடல்நலம் முழுதாக குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.