வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |

தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் நடந்து முடிந்திருக்கிறது. பரபரப்புக்கு காரணம் பிரகாஷ்ராஜ். ஹீரோக்கள் ஆதிக்கம் நிறைந்த தெலுங்கு சினிமாவில் வில்லன் பிரகாஷ்ராஜ் தலைவராக போட்டியிட்டதும், பிரகாஷ்ராஜ் கன்னடர் என்பதும்தான் பரபரப்புக்கு காரணம். கன்னடரான பிரகாஷ்ராஜ் தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர் ஆவதா என்ற கோஷம் கிளம்பியது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.
பிரகாஷ்ராஜை எதிர்த்து போட்டியிட்ட ஜீவிதா பின்னர் அவர் அணியிலேயே சேர்ந்தார். பிரகாஷ்ராஜுக்கு சிரஞ்சீவி குடும்பத்தினர் ஆதரவு அளித்தனர், அவரை எதிர்த்து போட்டியிட்ட விஷ்ணு மஞ்சுவுக்கு என்டிஆர் குடும்பத்தினர் ஆதரவு அளித்தனர். விஞ்சு மஞ்சு பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன். இதனால் இந்த முறை தேர்தல் பொது தேர்தல் போல நடந்தது.
நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவந்தது. இதில் தலைவராக விஷ்ணு மஞ்சு வெற்றி பெற்றார். அவர் பிரகாஷ்ராஜை விட கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இது தவிர மற்ற பதவிகளுக்கு வெற்றி பெற்றவர்களும் பெரும்பாலும் விஷ்ணு மஞ்சு அணியினர் தான்.
துணை தலைவர்களாக ஸ்ரீகாந்த், மதலரசி ஆகியோரும், ரகுபாபு பொது செயலாளராகவும், அறங்காவலராக சிவா பாலாஜியும், இணை செயலாளராக கவுதம் ராஜும் வெற்றி பெற்றனர். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜும், பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை ஜீவிதாவும் தோல்வி அடைந்தார்கள்.
நேற்று நடந்த வாக்குபதிவில் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், பிரபாஸ், ரவி தேஜா மற்றும் நாக சைதன்யா போன்றவர்கள் வாக்களிக்கவில்லை.