எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
கடலோரக் கவிதைகள் படத்தின் மூலம் அறிமுகமான ரேகா. அதன் பிறகு 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அக்கா, அம்மா, அண்ணி போன்ற குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். நேற்று வெளியான பேய்மாமா படத்தில் மொட்டை ராஜேந்திரன் ஜோடியாக காமெடி வேடத்தில் நடித்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் கடலோரக்கவிதை படத்தில் கதாநாயகியாக அறிமுகமான போது எப்படி மக்கள் வரவேற்று உற்சாகப் படுத்தினார்களோ, அதே போல திருமணத்திற்கு பிறகு கேரக்டர் ஆர்டிஸ்டாக நடிக்க வந்த போதும், அதே உற்சாகத்தையும் மரியாதையையும் கொடுத்து வரவேற்று என்னுடைய திரை வாழ்க்கையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் காரணமாக இருந்து வருகிறார்கள்.
இப்போது 'பேய் மாமா' படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நான் நடித்திருப்பதை பலரும் பாராட்டும்போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்த போது எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. இந்தப் படத்தில் நடிப்பதால் என்ன கவுரவ குறைச்சல் வந்துவிட போகிறது. எல்லா வகையான பாத்திரத்திலும் நடிக்க வேண்டும். அதுதான் நடிப்பு. இப்படித்தான் நடிப்பேன் என்று ஒரு வட்டத்துக்குள் நம்மை அடைத்துக் கொள்ள கூடாது என்று என் உள் மனது சொன்னது.
என்னுடைய திரை வாழ்க்கையில் என் மீது நான் வைத்த நம்பிக்கையை விட, மற்றவர்கள் என் மீது வைத்த நம்பிக்கைகள்
தான் என்னை ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றியிருக்கிறது. அந்த வரிசையில் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் என்னை நகைச்சுவை நடிகையாக பார்த்தார். எனக்குள் இருக்கும் அந்த திறமையை மக்களுக்கு அந்த பாத்திரம் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினார்.
ஒரு வழியாக தைரியமாக மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன் நடித்தேன். இப்போது மக்கள் பாராட்டுவதை கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறேன். என்னால் நகைச்சுவை வேடத்திலும் நடிக்க முடியும் என்கிற நம்பிக்கை கிடைத்திருக்கிறது.