சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
ஜோக்கர், ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். தற்போது சூர்யா தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ‛இடும்பன்காரி' என்ற படத்தில் நடிக்கிறார். துப்பறியும் திரில்லர் வகையை சேர்ந்த இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியாகி உள்ளது.
புதுமுக இயக்குனர் அருள் அஜித் இயக்கும் இதில் நடிகைகள் ஷிவாதா நாயர் மற்றும் ரம்யா பாண்டியன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் அனுபமா குமார், 'நீயா நானா' புகழ் கோபிநாத், இயக்குநர் வேலுபிரபாகரன், அருண் மற்றும் ஜோதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிக்கிறார்.
அமீன் ஒளிப்பதிவை கவனிக்க, அருண்ராஜ் இசையமைக்கிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு வர வைக்கும் பிரத்யேக அனுபவத்தை தரும் பரபரப்பு மிக்க துப்பறியும் திரில்லராக இடும்பன்காரி இருக்கும் என்று படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.