'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா |
பெண்களை மையப்படுத்திய படைப்புகள் அவ்வப்போது சில வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் ஆண் படைப்பாளிகளின் எண்ணங்களில் தோன்றிய படைப்புகளாகவே இருக்கின்றன.
இந்த நிலையில் முழுக்க முழுக்க பெண்களே இணைந்து உருவாக்கும் புதிய படம் ஒன்று தயாராக இருக்கிறது. இதனை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரிக்கிறார். இந்த நிறுவனம் ஏற்கெனவே கன்னிமாடம், வண்டி, மங்கி டாங்கி படங்களை தயாரிததுள்ளது.
அறிமுக இயக்குனர் பாக்யா இயக்கும் இந்தப்படத்திற்கு இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைக்கிறார்., சந்தோஷ் சிவனிடம் உதவியாளராக பணிபுரிந்த சின்னு குருவில்லா ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட உள்ளது.