அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
தலைவி படத்தில் நடிகர் தம்பி ராமைய்யாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்பட பிரஸ்மீட்டில் பேசிய அவர், ‛‛கொரோனா முதல் அலைக்கு பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டபோது மாஸ்டர் படம் ரசிகர்களை தியேட்டர்களுக்கு வர வழைத்தது. இரண்டாவது அலைக்கு பின் இப்போது மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வரும் தகுதி உடைய படமாக தலைவி இருக்கும். பெண்களின் ரோல் மாடலாக தலைவி படத்தின் தலைவியாக கங்கனா உள்ளார். கடற்கரையில் உறங்கும் 4 தலைவர்களை வட இந்திய நடிகையை வைத்து மரியாதையை செய்தது சிறப்பான ஒன்று.
எதிரிகளே இல்லாத ஒரு நபர் அரவிந்த்சாமி. இவரைப்போல் நான் அழகாக இருந்திருந்தால் ஒன்று ஜெயிலில் இருப்பேன் அல்லது செத்திருப்பேன் என்றார். ஜாதி, மதம், இனம் கடந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து செல்லும் ஒரு இடம் தியேட்டர்கள். அவை இப்போது மால்களாக, கடைகளாக, திருமண மண்டபங்களாக மாறுகின்றன. அவற்றை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து அவர்களுக்கு என்ன பிரச்னை என சிறப்பு கவனம் கொண்டு கேட்டு தியேட்டர்களை காப்பாற்ற வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம். தியேட்டர்களை காப்பாற்றிவிட்டால் சினிமாவையும் காப்பாற்றி விடலாம்''. என்றார் தம்பி ராமைய்யா.