'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் நடந்த விழா ஒன்றில் இயக்குனர் பா. ரஞ்சித், மன்னர் ராஜராஜ சோழனை பற்றி அவதூறாக பேசினார். ராஜராஜ சோழன் ஒரு அயோக்கியன் அவன் ஆட்சி காலத்தில் தான் தலித் மக்களின் நிலம் அத்தனையும் பறிக்கப்பட்டது. ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்கிறார்கள். ஆனால் அவன் ஆட்சி காலம் இருண்ட காலம். அவன் ஆட்சிக் காலத்தில்தான் டெல்டா பகுதியில் சாதியக் கொடுமைகள் அதிகமாக நடைபெற்றது. என்று பேசினார்.
பா. ரஞ்சித்தின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது . இது குறித்து பலரும் போலீசில் புகார் அளித்தனர். பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது. பா.ரஞ்சித் தாக்கல் செய்த மனுவில், வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்ட குறிப்புகளையே தான் பேசியதாகவும், இதே கருத்தை பலரும் பேசி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் இரு தரப்பு விளக்கமும் நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கின் இறுதி விசாரணையை வருகிற 28ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.