சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
வெளி உலகத்தில் அவர் முகம் எப்படி இருந்தாலும் சினிமாவில தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், காமெடியன் என பல முகங்களை கொண்டவர் அக்குபன்ஞ்சர் வைத்தியர் டாக்டர் பவர் ஸ்டார் சீனிவாசன். தற்போது அவர் 2 எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் பிக்கப் படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆகிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த படம் எனக்கு நூறாவது படமாகும். என் திரை உலக அனுபவங்களை கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் |எழுதி. இயக்குவதுடன் இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறேன். புதிதாக திருமணமான தம்பதிகள் ஒரு பங்களாவிற்கு குடியேறுகிறார்கள். அந்தபங்களாவில் பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து சொல்கிறேன். என்கிறார்.
சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார் ஜோடியாக நடிக்கிறார். மேலும் இதில் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வன், செந்தில், ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி, ஹர்சிதாதேவி, லட்சுமி பாலா, தீபிகா, குட்டி சரிதா, வெங்கய்யா பாலன், அகஸ்தியா என்று நட்சத்திரப்பட்டாளமே இதில் உள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை, மதுரை ஆகிய இடங்களில் படம் வளர்ந்து வருகிறது.