அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் 'மாறன்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்
கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்குப் பின் என்று பிரிக்கும் வகையில் மக்கள் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. இதனால் மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முகக்கவசம் தான் உயிர்கவசம் என்ற வகையில் அதைத் தங்களது உற்ற நண்பன் ஆக்கியுள்ளனர்.
தற்போது நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,, “நாங்கள் படப்பிடிப்பில் இருக்கும்போது, படப்பிடிப்புத் தளங்களில் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளன, ஆனால் நடிகர்களாகிய நாங்கள் முகக்கவசம் இல்லாமல் இருக்க வேண்டும். நான் எப்போதும் முகக்கவசம் அணிந்து பழகிவிட்டேன், திடீரென்று முகக்கவசம் இல்லாமல் இருப்பது ஆடை இல்லாமல் நிர்வாணமாக இருப்பதைப் போல உணர வைக்கிறது. அந்தளவிற்கு அது நம் வாழ்வின் அங்கம் ஆகிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.