போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

இயக்குனர் ஆர்.கண்ணன் எப்போதுமே திட்டமிட்ட காலத்துக்குள் படம் எடுப்பதில் வல்லவர். தற்போது அவர் இயக்கி வரும் காசேதான் கடவுளடா படத்தின் படப்பிடிப்பை முழுவீச்சில் ஒரே கட்டமாக எடுத்து முடித்திருக்கிறார். இந்த படம் சித்ராலாயா கோபு இயக்கிய படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்.
கண்ணன் கூறியதாவது: எனது முந்தைய சில படங்களின் படப்பிடிப்பை விரைவாக முடித்திருக்கிறேன் ஆனால் காசேதான் கடவுளடா முற்றிலும் வேறானது. பொது முடக்க காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். இவ்வளவு விரைவாக இப்படத்தை முடிக்க நடிகர்கள் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி , கருணாகரன் உட்பட்ட நடிகர்களும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் மட்டுமே தான் காரணம், அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால் தான் இது சாத்தியமானது. படத்தின் திரை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் விரைவில் வெளியிடவுள்ளோம் என்றார்.