பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
நடிகை நல்லெண்ணெய் புகழ் சித்ரா(56) திடீர் மாரடைப்பால் அதிகாலை காலமானார். இவரின் மறைவால் திரைத்துறையினர், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
1980களில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் சித்ரா. சேரன் பாண்டியன் படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்த இவரது கதாபாத்திரம் மிகவும் பிரபலம். தொடர்ந்து சினிமா, சீரியல்களில் நடித்து வந்தவர் ஒரு நல்லெண்ணய் விளம்பரத்தில் நடிக்க அதன்பிறகு நல்லெண்ணய் சித்ராவாகவே அடையாளப்படுத்தப்பட்டார்.
சென்னையில் கணவர் மற்றும் மகளுடன் வசித்துவந்த சித்ரா இன்று(ஆக., 21) அதிகாலை மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார். அவருக்கு வயது 56. அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள அவரது வீட்டில் சித்ரா காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலரும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கே.பாலசந்தரால் அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சித்ரா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன் ஊர்காவலன் என் தங்கச்சி படிச்சவ வெள்ளையத்தேவன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்த சித்ரா, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.
![]() கணவர் மகள் உடன் சித்ரா. |
கடந்த 1990ல் விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்ராவுக்கு மகாலட்சுமி என்ற மகள் இருக்கிறார். அவர் இந்தாண்டு பிளஸ் டூ முடித்துள்ளார். குழந்தையை வளப்பதற்காகவே நடிக்காமல் பல ஆண்டுகள் இருந்தார். சித்ரா கடைசியாக "என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா" என்ற படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் பள்ளி மாணவியாக நடித்து இருந்தார். இன்று மாலை 5 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
பறவைகளுக்கு உணவு, தண்ணீர்
நடிகை சித்ரா தினமும் ஏராளமான பறவைகளுக்கு தண்ணீர், உணவு அளித்து வருவார். தவறாமல் இவரது மொட்டை மாடியில் ஏராளமான காக்கைகள் உணவுக்காக வந்து கரையும். இதற்காகவே பெரும்பாலும் வெளியூர் பயணத்தை தவிர்ப்பாராம்.