Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓமனில் டிரக்கிங் சென்ற பாடகி சித்ரா ஐயரின் சகோதரி உயிரிழப்பு

05 ஜன, 2026 - 03:28 IST
எழுத்தின் அளவு:
Singer-Chitra-Iyers-sister-dies-while-trucking-in-Oman
Advertisement

மஸ்கட்: ஓமனில் டிரக்கிங் சென்ற பிரபல பின்னணி பாடகி சித்ராவின் சகோதரி ஷாரதா ஐயர் விபத்தில் பலியானார். அவரது மறைவுக்கு பாடகி சித்ரா இரங்கலும், வேதனையும் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் தாழவா பகுதியைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி ஆர் ஐயரின் மகளும், பின்னணி பாடகி சித்ரா ஐயரின் சகோதரி, ஷாரதா ஐயர், 52. ஓமன் ஏர் நிறுவனத்தின் முன்னாள் மேனேஜரான இவர், கடந்த ஜனவரி 2ம் தேதி தனது குழுவுடன், ஜெபெல் ஷாம்ஸ் பகுதியில் டிரக்கிங் சென்றார். அப்போது, ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஷாரதா ஐயர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஓமனில் இருந்து ஷாரதா ஐயரின் உடல், சொந்த ஊரான தாழவாவுக்கு கொண்டு வரப்பட்டு, ஜனவரி 7ம் தேதி இறுதிச்சடங்கு நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி தான் தந்தை ஆர்டி ஐயரின் மறைவுக்காக கேரளா வந்த ஷாரதா ஐயர், டிசம்பர் 24ம் தேதி தான் மீண்டும் ஓமன் திரும்பியுள்ளார். தனது சகோதரியின் மறைவுக்கு பாடகி சித்ரா ஐயர் இரங்கல் தெரிவித்துள்ளார்

பாடகி சித்ரா ஐயர் மலையாளத்தில் பல பாடல்கள் பாடியிருந்தாலும் தமிழிலும் ‛‛தோழா தோழா.., அலே அலே.., அசத்துரா அசத்துரா...'' உள்ளிட்ட சில பாடல்களை பாடி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாலா தயாரிப்பில் படம் இயக்கப் போகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?பாலா தயாரிப்பில் படம் இயக்கப் ... சென்சார் சான்றிதழ் வரலையா : டென்ஷனில் பராசக்தி, ஜனநாயகன் குழு சென்சார் சான்றிதழ் வரலையா : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap