'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2021-2023ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று பிரசாத் லேப்பில் நடந்தது. இதில் டைமண்ட் பாபு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அவரது அணியை சேர்ந்த வீ.கே. சுந்தர், துணை தலைவராகவும், யுவராஜ் செயலாளராகவும், கணேஷ்குமார், முத்துராமலிங்கம் இணை செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எதிர் அணியை சேர்ந்த கோவிந்தராஜ் துணை தலைவராகவும், குமரேசன் பொருளாளராகவும் தேர்வு பெற்றார்கள்.
இவர்கள் தவிர ஆறுமுகம், புவன், தர்மா, இனியன், கிளாமர் சத்யா, சாவித்ரி, ராஜேஷ்,வெங்கட், திரைநீதி செல்வம். ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வானார்கள். மூத்த மக்கள் தொடர்பாளர்கள் விபி மணி, கண்ணதாசன், பாரிவள்ளல் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினார்கள்.