இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' | மூத்த நடனக் கலைஞர்களை கவுரவிக்கும் “டான்ஸ் டான்” விழா | மழையில் மூழ்கிய செட்டுகள் : இனி எப்போது ஷூட்டிங்? | “ரசிகர்களின் ரசனைமிகு வில்லன்” நடிகர் ரகுவரன். |
நடிகை நமீதாவுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்து வெகு காலமாகி விட்டது. தற்போது அவர் பாவ் பாவ் என்ற பெயரில் சொந்த படம் தயாரித்து அதில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விரைவில் நமீதா சீரியலுக்கு வருகிறார்.
நமீதாவுக்கு சின்னத்திரை புதிதில்லை. மானாட மயிலாட நிகழ்ச்சியில் மார்க் போட்டார். அதன்பிறகு டான்ஸ் ஜோடி டான்சில் நடுவராக இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது சீரியலிலும் நடிக்க இருக்கிறார்.
இதற்கு முன்னோட்டமாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுபுது அர்த்தங்கள் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தேவ்யானி, அபிஷேக், திண்டுக்கல் லியோனி மற்றும் பலர் நடித்து வரும் சீரியல் இது.
இதில் நமீதா நடிகை நமீதாவாகவே நடித்துள்ளார். காரில் வரும் நமீதா, வழியில் திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாயை பார்க்கிறார். அதை பார்த்துவிட்டு, யாருக்குமே சமூக பொறுப்பு இல்லை. அனைவரும் இதை கடந்து செல்கின்றனர் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். அப்போது தேவயானியின் மருமகள் அதை எடுத்து மூடுகிறார். நடிகை நமீதா அதை பாராட்டுகிறார். இந்த காட்சி சீரியலின் புரமோவில் இடம்பெற்றுள்ளது.
நமீதா விரைவில் ஒரு புதிய தொடரில் டைட்டில் ரோலில் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. விரைவில் முறையான அறிவிப்பு வரும்.