மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
தமிழ் சினிமா உலகில் மட்டுமல்லாது தெலுங்குத் திரையுலகத்திலும் முன்னணி கதாநாயகிகளாக இருந்தவர்கள் ராதிகா, மீனா. இருவரும் இப்போதும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இருவருக்கும் இடையே ஒரு ஒற்றுமை உள்ளது. இதே ஆகஸ்ட் 10ம் நாளில்தான் இருவரும் தமிழ் சினிமாவில் கதாநாயகிகளாக அறிமுகமாகி உள்ளனர்.
1978ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த 'கிழக்கே போகும் ரயில்' படம் தான் ராதிகாவின் முதல் படம். 1990ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த 'ஒரு புதிய கதை' படத்தின் மூலம் தான் மீனா கதாநாயகியாக அறிமுகமானார்.
மீனா அதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். கதாநாயகியாக அறிமுகமான படம் 'ஒரு புதிய கதை'. அந்தப் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால், 1991ல் வெளிவந்த ராஜ்கிரண் நடித்த 'என் ராசாவின் மனசிலே' படம் அவருக்குப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. அதன்பின் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், பாக்யராஜ், சரத்குமார், அர்ஜுன், முரளி, பிரபுதேவா, அஜித் என 90களின் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
1978ல் ஆகஸ்ட் 10ல் அறிமுகமான நடிகை ராதிகாவுக்கு முதல் படமான 'கிழக்கே போகும் ரயில்' படமே பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன்பின் அவர் சேர்ந்து நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக, பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் கடந்த 43 வருடங்களாக தமிழ், தெலுங்கு சினிமா மற்றும் டிவிக்களில் ராஜ நடை போட்டு வருகிறார் ராதிகா. தற்போது கூட சிம்பு படம், அருண் விஜய் படம் என படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
மறக்க முடியாத தமிழ் சினிமா கதாநாயகிகளில் ஒரே நாளில் அறிமுகமான ராதிகா, மீனா ஆகியோருக்குத் தனி இடமுண்டு.