பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

2019ம் ஆண்டு சாருஹாசன், ஜனகராஜ், பாலா சிங், மாரிமுத்து ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தாதா 87. இந்தப் படத்தை விஜய் ஸ்ரீ தயாரித்து, இயக்கியிருந்தார். சாய்குமார் நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் ஒன் பை டூ தனது படத்தின் அதிகாரபூர்வமற்ற ரீமேக் என்று குற்றம் சாட்டி உள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனை வைத்து நான் எழுதி இயக்கி ஜி மீடியா கலை சினிமாவுடன் இணைந்து தயாரித்த படம் தாதா 87. தற்சமயம் பவுடர் ,பப்ஜி படங்களை இயக்கி வருகிறேன். சாய்குமார் நடிப்பில் ஒன் பை டூ என்ற பெயரில் தெலுங்கில் ஒரு படம் தயாராகி வருகிறது. இது தாதா 87 படத்தின் ரீமேக் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
ஒன் பை டூ படக்குழு என்னுடைய கற்பனையும் என் உழைப்பையும் என்னிடம் முறையாக எந்தவிதமான அனுமதியும் பெறாமல் பயன்படுத்தி இருப்பதும், சாய்குமார் போன்ற மிகப்பெரிய நடிகர் துணையுடன் நடந்து இருப்பதும் வருந்தத்தக்கது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம். என்று குறிப்பிட்டுள்ளார்.




