ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் |
'ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து' ஆகிய ஆபாசப் படங்களையும், 'கஜினிகாந்த்' என்ற காமெடி படத்தையும் இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயகுமார். அவர் கடைசியாக இயக்கிய 'இரண்டாம் குத்து' எனும் ஆபாச படத்தில் அவரே கதாநாயகனாகவும் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. அவரை கதாநாயகனாக ரசிகர்கள் ஏற்கவில்லை என்பது அவருக்கே புரிந்துவிட்டது போலும். அதனால், மீண்டும் இயக்கத்திற்கே திரும்பிவிட்டார்.
அவர் அடுத்து இயக்க உள்ள படத்தில் பிரபுதேவா, வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் ஆகியோர் நடிக்க உள்ளார்கள். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகியது.
கடந்த வாரம் டிவியில் நேரடியாக வெளியான 'வெள்ளை யானை' படத்தைத் தயாரித்தவரும், தற்போது விஷால், ஆர்யா நடிக்கும் 'எனிமி' படத்தைத் தயாரிப்பவருமான வினோத் குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படம் பற்றி தனது சமூக வலைத்தளத்தில் பூஜை புகைப்படங்களுடன் பதிவிட்டு, “பின்குறிப்பு - இந்தப் படம் ஒரு ஆக்ஷன் என்டர்டெயினர்” எனக் குறிப்பிட்டுள்ளார். தான் ஆபாசப்படம் எடுக்கவில்லை என்பதை ரசிர்களுக்குப் புரிய வேண்டும் என தனியாகக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.