‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் | சர்ச்சை பேச்சு: பகிரங்க மன்னிப்பு கேட்ட மிஷ்கின் | அஜித்துக்கு பத்ம பூஷன் விருது: திரையுலகினர் வாழ்த்து | 50 நாளை நிறைவு செய்த 'புஷ்பா 2' | அரசியலுக்கு வருகிறாரா திரிஷா? லேட்டஸ்ட் தகவல் | ராஜமவுலி படத்துக்காக சிங்கத்துடன் சண்டை போடும் மகேஷ் பாபு! | ஹிந்தி ஆடியன்சை குறி வைக்கும் நாகசைதன்யா- சாய் பல்லவியின் தண்டேல்! | ஆங்கிலத்திலும் வெளியாகும் ரஜினியின் ஜெயிலர்-2 |
தென்னிந்தியத் திரையுலகத்தில் இந்த ஆண்டில் வெளிவர உள்ள படங்களில் சில படங்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கன்னடத்தில் தயாராகியுள்ள 'கேஜிஎப் 2', தெலுங்கில் தயாராகியுள்ள 'புஷ்பா' ஆகிய இரண்டு படங்களும் அதில் அடங்கும். இந்த இரண்டு படங்களையும் தென்னிந்திய மொழிகளுடன் ஹிந்தியிலும் வெளியிட உள்ளார்கள்.
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா' படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. அதன் முதல் பாகத்தை இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யஷ் நடித்துள்ள 'கேஜிஎப் 2' படத்தையும் அதே விடுமுறையில் வெளியிடப் போவதாக நேற்று செய்திகள் வெளியாகின.
இப்படி இரண்டு பிரம்மாண்ட படங்களும் ஒரே சமயத்தில் வெளியானால் தியேட்டர்களைப் பிடிக்க கடும் போட்டி நிலவும். அதிலும் இரண்டு படத்தையுமே பான்-இந்தியா படமாகத்தான் வெளியிடப் போகிறார்கள். இப்படி ஒரே சமயத்தில் போட்டி போட்டால் வேறு எந்த படங்களும் அந்த நேரத்தில் வெளியாக முடியாது.
இதில் ஏதாவது மாற்றம் வருமா இல்லையா என்பது விரையில் தெரிந்துவிடும்.