'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாள நடிகை மியா ஜார்ஜ் 2014-ஆம் ஆண்டு வெளியான அமரகாவியம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து 'இன்று நேற்று நாளை', 'வெற்றிவேல்', 'ஒரு நாள் கூத்து', 'ரம்', 'எமன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'கோப்ரா' படத்திலும் மியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மியா ஜார்ஜ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொழிலதிபர் அஸ்வின் பிலிப் என்பவரைக் கரம் பிடித்தார். சில மாதங்களுக்கு முன்பு மியா கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தார். தற்போது இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைப்படத்தை மியா ஜார்ஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் குழந்தைக்கு லுகா ஜோசப் பிலிப் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதையடுத்து அந்தத் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.