ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் | தமிழர்கள் ரசனை குறைந்தவர்களா? இயக்குனர் ஞானராஜசேகரன் |
தி கிரேமேன் படத்தை முடித்துவிட்ட தனுஷ் அடுத்தபடியாக கார்த்திக் நரேன் இயக்கும் தனது 43ஆவது படத்தில் ஐதராபாத்தில் முகாமிட்டு நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கும் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார் தனுஷ். மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்தநிலையில், மீண்டுமொரு தெலுங்கு படத்திலும் தனுஷ் நடிப்பதாக தற்போது இன்னொரு புதிய தகவலும் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் அந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நாக வம்சி தயாரிக்கிறார். அவரும் தனுஷை ஐதராபாத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம். அந்த படத்தை தெலுங்கில் தொலி பிரேமா, மிஸ்டர் மஜ்னு, ரங்தே போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்குகிறாராம். இது குறித்த தகவலை விரைவில் தனுஷ் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.