'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவதை அடுத்து, விஜய் சேதுபதியும் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், தனித்தீவில் தங்க வைக்கப்படும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு அதில் இறுதி வரை நின்று வெற்றி பெறுபவரை வெற்றியாளராக அறிவிக்கும் சர்வைவர் எனும் நிகழ்ச்சி ஒன்று விரைவில் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. 15 முதல் 20 போட்டியாளர்கள் இதில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. மூன்று மாத காலம் இந்தியாவிற்கு வெளியில் உள்ள ஒரு தனித்தீவில் இதற்கான நிகழ்வு படமாக்கப்பட உள்ளது. தற்போது போட்டியாளர்கள் தேர்வு நடக்கிறது. இதனிடையே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் சிலரிடம் பேசி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.