இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு |

காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வைப்பதால் அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தார்கள். இப்படியான நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண் போலீசாரை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஒரு ஆணை பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், சாலை பாதுகாப்பு பணியில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். பலமுறை நான் என் தாயுடன் பயணம் செய்யும்போது இவ்வாறு பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண்கள் இயற்கை உபாதைகள் மற்றும் அவசர தேவைகளுக்காக என்ன செய்வார்கள் என்று என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்கள். நானும் வருந்தியிருக்கிறேன். அந்த வகையில் இந்த ஆணையைக் கண்டு மனநிம்மதி அடைகிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.
அதேபோல் இதே பிரச்சினையை மையமாக வைத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூட பிரியங்கா நடிப்பில் மிக மிக அவசரம் என்ற பெயரில் ஒரு படம் இயக்கியிருந்தார். அதில் சாலை பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் காவலர் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருந்தார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பெண் போலீசாரை சாலையோர பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று அறிவித்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படைப்புகள் என்பது பொழுபோக்கு மட்டுமல்ல, அதைத்தாண்டி இந்த சமூகத்தில் எத்தகையை மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் மிக மிக அவசரம் படத்தை இயக்கியதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார் சுரேஷ்காமாட்சி.