மஞ்சு மனோஜுக்குத் திருப்பம் தந்த 'மிராய்' | தாய்மை அடைந்த கத்ரினா கைப்: அடுத்த மாதம் 'டெலிவரி' | 'லோகா' வெற்றி: இயக்குனர் ஜீத்து ஜோசப் எச்சரிக்கை | ஓடிடி : முதலித்தில் 'சாயரா', இரண்டாமிடத்தில் 'கூலி' | பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை |
பாலிவுட் நடிகைகளில் பரபரப்புக்கு பெயர் போனவர் நடிகை கங்கனா ரணவத். தொடர்ந்து, எதை பற்றியாவது அதிரடியான கருத்துக்களை கூறி வரும் கங்கனா, பிஸியாக நடித்து வருபவர் என்பதால் அதிக அளவு வருமான வரி செலுத்துபவர்களின் பட்டியலில் இருக்கிறார்.. ஆனால் கடந்த வருடத்திற்காக தான் செலுத்த வேண்டிய வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “என்னுடைய வருமானத்தில் 45 சதவீதத்தை வரியாக செலுத்தும் அளவுக்கு மிக அதிக அளவில் வரி செலுத்துபவர்கள் பிரிவில் நான் இருந்தும், அதிக அளவு வரி செலுத்தும் நடிகையாக இருந்தும் கூட, வேலை இல்லாத காரணத்தால் கடந்த வருடத்தில் என்னுடைய வரித்தொகையில் பாதிக்கு மேல் செலுத்த முடியவில்லை. இப்படி நடப்பது என் வாழ்க்கையில் இதுதான் முதல் தடவை” என கூறியுள்ளார். மேலும் வரி பாக்கி கட்ட வேண்டியவர்களுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் மாற்றியமைத்திருப்பது குறித்து வரவேற்பும் தெரிவித்துள்ளார் கங்கனா.