ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
விக்ரமும், அவரது மகன் துருவும் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். விக்ரமின் 60வது படமாக இது உருவாகிறது. இது அண்டர்கிரவுண்ட் தாதாக்களின் கதை என்று கூறப்படுகிறது. எனவே அதற்கு ஏற்றார்போல விக்ரமும், துருவும் தங்கள் உடலை தயார்படுத்தியிருக்கிறார்கள் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லலித் குமார் தயாரிக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் துருவ் விக்ரம் பதிவிட்டதாவது : ‛‛இந்த புகைப்படம் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் எடுக்கப்பட்டது. கடினமான ஓராண்டுக்கு பின் பணிக்கு சென்றது அவ்வளவு அருமையாக இருந்தது. எனக்கு பிடித்த இயக்குனர், குழுவுடன் பணியாற்றுவது சிறப்பாக இருந்தது. மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு போக மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். அனைவரும் எதிர்பார்த்தது போலவே எல்லாம் சரியாகி மிக விரைவிலேயே பழைய நிலைக்கு திரும்புவோம். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், வீட்டுக்குள்ளேயே இருங்கள், நேர்மறையாக சிந்தியுங்கள். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த கொரோனாவை வென்று விரைவில் மீண்டு வருவோம். பழையபடி வாழ்க்கையை ஜமாய்போம்'' என்று பதிவிட்டுள்ளார்.
விக்ரம், துருவ் நடிக்கும் அடுத்த படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்குகிறார். கிராமத்து கபடி விளையாட்டை மையமாக கொண்ட இந்த படத்தில் விக்ரம் கபடி கோச்சராகவும், துருவ் கபடி வீராகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மட்டுமே முடிந்திருக்கிறது. படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இரண்டு படங்களிலும் விக்ரமும், துருவும் நேருக்கு நேர் மோதுகிறார்கள் என்பது மட்டும் உறுதி.