'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகரும், என்னடி முனியம்மா பாடல் புகழ் பாடகருமான டி.கே.எஸ்.நடராஜன்(87) உடல்நலக் குறைவால் இன்று(மே 5) காலை 6.30 மணிக்கு காலமானார்.
டி.கே.எஸ். கலைக்குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்து வந்த நடராஜன், அந்த குழுவில் இருந்ததால் டி.கே.எஸ்.நடராஜன் என அழைக்கப்பட்டார். தொடர்ந்து மேடை நாடகங்களில் நடித்தும், பாடியும் வந்தார். 1954ல் ரத்த பாசம் என்ற படம் மூலம் சினிமாவில் நடிகராக களமிறங்கினார். தொடர்ந்து சின்ன வேடங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாக 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான மேடை கச்சேரிகளிலும் பாடி உள்ளார்.
1984ம் ஆண்டு சங்கர் கணேஷ் இசையில் வெளியான வாங்க மாப்பிள்ளை வாங்க என்ற படத்தில் இடம் பெற்ற, ‛என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி' என்ற பாடல் மூலம் இன்னும் பிரபலமானார் நடராஜன். இதேப்போன்று பல நாட்டுப்புற பாடல்களை அவர் பாடி உள்ளார். இதே என்னடி முனியம்மா பாடல் அர்ஜுன் நடித்த வாத்தியர் படத்தில் ரீ-மேக் ஆனது. அதிலும் பாடி, ஆடியிருந்தார் நடராஜன்.
சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் நடராஜனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 5மணிக்கு அன்னாரது இறுதிச்சடங்கு நடக்கிறது.