ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, திமுக., தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகை பிரியா பவானி சங்கர் டுவிட்டரில், ‛‛நீண்ட காலத்துக்கு பின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் சிறப்பாக வழி நடத்துவீர்கள் என்று நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருக்குறோம். வாழ்த்துகள்'' என பதிவிட்டார்.
இதற்கு ஒருவர், ‛‛சகோதரி முதல்வரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது. அப்படியே உங்கள் முட்டாள்தனமான வாதப்படி கூட 2016 க்கு பிறகு 2021 ல தான தேர்தல் வரும் அது என்ன நீண்ட காலம்'' என பதிவிட்டார். அவருக்கு, ‛‛மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து இங்கி பிங்கி போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது. 6வது வகுப்பில் நானும் குடிமக்கள் பற்றி நிறைய படிச்சிருக்கேன். மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை'' என பதிவிட்டார்.
மற்றொருவர் இவர் பதில் கொடுத்ததற்கு, ‛‛மேடம் இன்னும் 5 வருஷத்துல ரெட் ஜெயன்ட் மூவிஸ்,கிளவுட் நயன் மூவிஸ் உள்ளிட்ட இதர பிற தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்கணும்ல பதறத்தானே செய்வாங்க'' என பதிவிட்டார். அதற்கு பிரியா, ‛‛ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு. முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் வாய்ப்பு தேடி டுவீட் போட்டுகிட்டு இருக்கேன்'' என பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து அவருக்கு எதிராக பலர் கருத்து தெரிவிக்க அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரியா.