சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

தெலுங்கில் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் படம் புஷ்பா. செம்மர கடத்தலின் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். முக்கிய வேடத்தில் பஹத் பாசில் நடித்து வருகிறார். சமீபத்தில் படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா பாசிடிவ் என ரிசல்ட் வந்ததால் அவர் தற்சமயம் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஒய்வு எடுக்கிறார்.
ஆனாலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது.. காரணம் பஹத் பாசில் கொடுத்த தேதிகளை வீணாக்க விரும்பாத தயாரிப்பு நிறுவனம், அல்லு அர்ஜுனுடம் காம்பினேஷன் இல்லாத, அதேசமயம் பஹத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைந்து படமாக்கிவிட விரும்பியது..
ஆனால் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும்போது படபிடிப்பை அவசியம் நடத்தத்தான், வேண்டுமா என சோஷியல் மீடியாவில் சர்ச்சை எழுந்தது, இதனை தொடர்ந்து படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது புஷ்பா படக்குழு. இப்படம் தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் ரிலீஸாக உள்ளது.